
யாழ். சித்தன்கேணி கிரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவரஞ்சிதமலர் பொன்ராஜா அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குலேந்திரராணி(கனடா), ரஞ்சிதராணி(ஜெர்மனி), குலசிங்கம்(ஜெர்மனி), ஜெயராசசிங்கம்(இலங்கை), துரைராசசிங்கம்(ஸ்டீபன்- பிரான்ஸ்), ரட்ணசிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற Dr.கனகசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சற்குணசிங்கம்(கனடா), காலஞ்சென்ற வசந்தகுமார்(ஜெர்மனி), குலதேவி(ஜெர்மனி), இராசமலர்(இலங்கை), ரூத்(பிரான்ஸ்), ஜெனித்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
போல்சனா, தர்சிகா, கிறிஸ்ரினா, நிறோஜன், அஞ்சலி, அனோஜன், கிறிஸ்ரினா, யூலியா, யோனாத்தன், ஜெசாந்தன், கிறிஷாந்தன், ஜெசிக்கா, துஷானி, நிஷானி, சுமன், விதுஷன், நிதுஷன், யதுஷன், சாமுவேல், நிவேதா, நிக்ஷன், நிதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஐஸ்சு அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதோடு. அன்னாரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.