Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUL 1970
இறப்பு 05 OCT 2016
அமரர் தவராஜலிங்கம் தவசீலன்
யாழ்/ இந்துக் கல்லூரி பழைய மாணவர்
வயது 46
அமரர் தவராஜலிங்கம் தவசீலன் 1970 - 2016 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவராஜலிங்கம் தவசீலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டுகள் மறைந்தாலும்
எம்மால் உமது பிரிவை மறக்க முடியவில்லை

எனக்குத் தெரியும் நீங்கள் போன இடம்
நெடுந்தூரபயணம் அந்த இடத்திற்கு போனவர்கள்
எவரும் திரும்பி வரமாட்டார்கள்- ஆனால்
எனது பிள்ளைகளோ எமது அப்பா, திரும்பி வருவார்
என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
இனிமேல் எமது அப்பா வரமாட்டார் என்று சொன்னால்
அவர்களுக்கு  விளங்குகின்ற வயது இல்லை

சிறுவயதிலே தந்தையை இழந்தேன்
அதே நிலை எனது பிள்ளைகளுக்குமா!
இது விதியா? சாபமா?
நீங்கள் செய்ய வேண்டிய பிள்ளைகளின்
கடமையை நானே செய்கிறேன்

உங்களுடைய ஆத்மா சாந்தியடைய நாம் வணங்கும்
தெய்வமான மேல்மருவத்தூர் அம்மன் அருள் புரிவார்

உங்கள் அன்பான மனைவி-ஷாமினி,
ஆசைமகன்- தாருஜன், ஆசைமகள்- தாருக்‌ஷா

தகவல்: மனைவி, பிள்ளைகள்