
யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவராஜா சுரேந்திரராஜ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்ட
எங்களின் கணவரே, தந்தையே, சகோதரனே, மாமனே, தாத்தாவே..!
எங்களைப் பிரிந்து பத்து ஆண்டுகள் மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையா
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை..
எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை..
நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ
ஆண்டு பத்து ஆனாலும்
அழியாத அன்புருவாக
என்றும் வாழ்வீர்கள்
என் நெஞ்சில் பண்புருவான தந்தையே!
எங்களுடைய வெற்றிகளுக்குப்
பின்னால் நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!
மறக்க முடியவில்லை!!
ஆறுதல் கூற நாம் இருந்தும்
ஆறவில்லை தந்தையே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
My brother Suren may have left us but, he has left with us lots of love and full of good memories. May his soul rest in peace with the parents and brother Ravi.