யாழ். பருத்தித்துறை சுப்பர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே நித்தலாடனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவராசா பவுன்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்து ஆண்டு
ஆனாலும் ஆறாது உன் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும்
நீங்காது சுழல்கிறதே!
புன்னகையோடு காணாமல் போனவனே
கண்ணீரோடு எம்மைத் தவிக்கவிட்டுச் சென்றாயே.
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள் கண்ட
கனா ஏராளம் அத்தனையும் நீ
கனவாக்கி எங்கு சென்றாய்!
காலங்கள் தேய்திடுனும் உன்
நினைவுகள் தேய்ந்திடுமோ!
உறவுகள் புலம்புகின்றன ஊரே
உனை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ உன் பிரிவால்
துவண்டு கிடக்கிம் உள்ளங்களுக்கு
ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!