Clicky

தோற்றம் 07 NOV 1967
மறைவு 05 JAN 2020
அமரர் தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
வயது 52
அமரர் தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் 1967 - 2020 ஏழாலை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 10 JAN 2020 United Kingdom

இம்மாதம் 5ம் திதி தொலைபேசியில் இடிபோல் வந்த அந்த செய்தி எங்களை கதிகலங்க வைத்துவிட்டது. இந்த செய்தி கனவாக இருக்கக்கூடாதா? என மனம் ஒரு கணம் நினைத்தது. அது உண்மை என அறிந்ததும் எம்மை ஆழா துயரில் மூழ்கடிக்க செய்துவிட்டது. நானும் எனது குடும்பமும் ஒருமுறை யேர்மணிக்கு எங்கள் உறவினர் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் நண்பரான உங்களை சந்தித்தோம். அந்த கணமே உங்கள் அன்பால் எங்களை ஆட்கொண்டீர்கள். வீட்டிற்கு வரவழைத்து விருந்தோம்பல் செய்து உங்கள் அனுசரிப்பால் எங்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றீர்கள். ஆனால் இன்று எம்மை ஆழா துயரில் ஆழ்த்திவிட்டு மீளா துயில் கொள்கிறீர்களே. இது என்ன கொடுமை?வாழவேண்டிய வயதில் சாவை அணைத்தது ஏன்? புவியில் உங்கள் சேவை போதும் வானுலகம் வா என்று கர்த்தர் உங்களை அழைத்தாரா? என்ன செய்வது மரணத்தை யாரால் வெல்ல முடியும்? பூமியில் எல்லோரும் யாத்திரை வந்தோம். யாத்திரை முடிந்ததும் நித்திரை கொள்வோம். இது நியதி? ஆனால் இந்த வயதிலா? அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.