யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பெரிய தபாற் கந்தோரடி, யாழ்ப்பாணம், கனடா Richmond Hill, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநாயகி பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-01-2026
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ அம்மா...!
விழியோரம் கண்ணீருடன் உங்கள்
புன்னகை முகத்தை தேடுகின்றோம்!
பேசும் தெய்வமாய் இருந்த
எம் “தேவநாயகி” அம்மா...!
நீங்கள் காட்டிய அன்பும்,
எம்மை வளர்த்த பண்பும்
எங்கள் வாழ்வின் அணையா விளக்கு!
நீங்கள் இல்லாத வெறுமை
எம் நெஞ்சை நெருடினாலும்,
நீங்கள் ஊட்டிய தன்னம்பிக்கையும்
அறநெறியும் எம்மை
வழி நடத்திக் கொண்டிருக்கின்றது!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அம்மா
உங்கள் மடிக்கு ஈடாகுமா?
வரமென எங்கள் வாழ்வில் வந்த தவமே...!
ஒவ்வொரு நிமிடமும் உங்கள்
நினைவுகள் தானம்மா!
உங்களின் அன்பினால் உருகி நிற்கும்
எங்கள் உள்ளங்களில் நீங்கள்
என்றென்றும் ஒளி விளக்காய்
வீற்றிருப்பீர்கள் அம்மா...!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
உங்கள் நினைவுகளை சுமந்தபடி வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in peace Amma! Dr.நாகேஸ்வரன் சிவானுஜா குடும்பத்தினர்
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
We miss you Amma! சிவகுமார் நாகேஸ்வரி குடும்பத்தினர் கனடா
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.