கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சிவபுரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-12-2024
தாயே நீ எம்மைப் பிரிந்து
தசாப்த காலமானதுவோ!
அருள் விளக்கே நீ அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதம்மா
நீ எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உன் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீ சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
அரும்பசி வந்தபோது அம்மா உன் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும்- என்ன
அன்னையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு
உன்னைத் தொழுதேத்த எம் முன்னே நீ இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம் இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும் உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...