Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 SEP 1946
இறப்பு 24 JUL 2024
திருமதி தவமணி சிவப்பிரகாசம்
வயது 77
திருமதி தவமணி சிவப்பிரகாசம் 1946 - 2024 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு வெள்ளாம் முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், கணுக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சிவப்பிரகாசம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
எம் ஈர விழிக் கண்ணீர் மட்டும்
ஓயவில்லையே!!!

சிரிப்புடன் அழகாக வாழ்ந்த உன்னை
இறைவன் அழைத்துச் சென்றானே!!!
பிறந்த இடம் சிறக்க புகுந்த இடம் செழிக்க வாழ்ந்தாய்!!!
மாறாத உன் அழகிய முகமும் அன்பான
பேச்சும் எம்மை வாட்டுதே!!!

நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!!!

அல்லும் பகலும் அயராது உழைத்து
நல்ல மனையாளாய் அன்புத் தாயாய் வாழ்ந்தாய்!!!

அன்பாக பேசி ஆறுதலடையச் செய்தீரே
உள்ளம் உருகுது உம்பிரிவு தாங்காமல்!!!

உம்மோடு வாழ்ந்த பசுமையான நினைவுகள்
என்றும் எம்மை விட்டகலாது!!!

அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச்
சித்திரம் தாயானால் அதன் வடிவம் நீ எமக்கு!!!

கடல் நீரை கடன் வாங்கி என் கண் கொண்டு அழுதாலும்
நாம் சொல்லும் நன்றி உனக்கு ஈடாகுமா!!!

தங்கள் ஆன்மா இறை திருவடியில் இளைப்பாற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டி கிரியை 21-08-2024 புதன்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியை 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.