
யாழ். நெல்லியடி மஹாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தவமணி இராசா அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் சீதேவி தம்பதிகளின்ன் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அசுபதி, தவராசா, தங்கவேல் மற்றும் இரத்தினம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராணி, கைலாயநாதன், நிமலராணி, சசிகலாராணி(குடும்ப நல உத்தியோகத்தர்), பாரதராணி, மதனராணி(பிரதிமுகாமையாளர்- மக்கள்வங்கி, சாவகக்சேரி), தெய்வீகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற V.P. செல்வநாதன், சுதர்சினி, கந்தையா, விஜயசுகுமார், ஸ்ரீதரன், யோகராஜா(செலிங்கோலைவ், நெல்லியடி), சுஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சித்ரா(தாதிய உத்தியோகத்தர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), டெஸ்மன் பிரகாஷ்(போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), கஸ்தூரி(முகாமைத்துவ உதவியாளர், கரவெட்டி பிரதேச செயலகம்), கங்காதரன்(ஆசிரியர், அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்), சிந்துஜா(ஆசிரியர், அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்), அருண்(கொழும்பு பல்கலைக்கழகம்) சாதனா(யாழ். பல்கலைக்கழகம்) கீர்த்தனன், சதுஸ்காந்(மாணவன், யா/நெல்லியடி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நெல்லியடி கொடிகாமம் வீதியில் யா/திரு இருத்யக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.