
யாழ். சாவகச்சேரி வடக்கு ஐயா கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கந்தையா அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
Dr அனுசியா, Dr அனுசாந்தி, அனுராதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரவி அவர்களின் அன்பு மாமியாரும்,
சௌம்யா, மதுஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சரவணமுத்து, தியாகராசா, காலஞ்சென்றவர்களான பூமணிதேவி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஐயா கடையடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details