Clicky

பிறப்பு 30 JAN 1962
இறப்பு 23 JUN 2020
அமரர் தர்மசேகரன் தர்மலிங்கம் (சிவா)
வயது 58
அமரர் தர்மசேகரன் தர்மலிங்கம் 1962 - 2020 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmasekaran Tharmalingam
1962 - 2020

உற்றார், உறவினர் நிகழ்வுகளில் எல்லாம் நான் போனவுடன் தேடுவது என் மனம் உன் முகத்தைத்தான் அண்ணா. எங்கே இருக்கிறார் என் அண்ணா, சிவா அண்ணா, எனக்கும் அந்த மேசையில் இடம் கிடைக்குமா? புன்முறுவலுடன் என் ஏக்கத்தை புரிந்து இடம் ஒதுக்கி தருவார் என் அண்ணா. என் சிறு வயதில் எனக்கு முன்னுதாரணமாக, ஆண்பிள்ளை என்றால் எப்படி பொறுப்புடன் குடும்பத்தையும் தொழிலையும் முன்னின்று நடத்தும் என்று பலர் சொல்லி கேட்டும், நேரில் பார்த்தும் வியந்திருக்கிறேன். ஆளுமையும், தலைமையும், தட்டி கொடுத்து வேலை வாங்குவதிலும் சாதுரியமானவர் என் அண்ணா. மோட்டார் சைக்கிள் ஓடும் ஸ்டைலில் இருபாலை வீதியை மட்டுமா திரும்பி பார்க்கவைத்தார், யாழ்ப்பாணம் வரையும் என் அண்ணா,. ஊரிலும் சரி புலம் பெயர் வாழ்விலும் சரி வேலையும் உடல் வாகும் சுகயீனங்களும் கூட நீ எனக்கு அண்ணா. துயரத்தில் கண்களைக் குழமாக்கினாய், தொண்டையை அடைத்தாய், மனதை ஸ்தம்பித்தாய் என்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தாய் அண்ணா, சிவா அண்ணா. ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். சாந்தி! சாந்தி! சாந்தி! ஆழ்ந்த அனுதாபங்களுடன் மாமா (தம்பி) ச.சம்பந்தன் (Sam Thiru)

Write Tribute

Tributes