யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கல்லுவம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசன் சின்னதுரை அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பிகை(லண்டன்), சுகுணகுமார்(Toronto), சுகிர்தன்(Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, தியாகராசா, நடராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோகரன், பாலதேவி, உமா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஐந்தூரி, மிதுசன், சஜன், சோனா, மனு, உமன், ஆஷா, இயல்பன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிருஸ்சாந்தராஜா, கெங்காதேவி, மூர்த்தி, கிருபாமூர்த்தி, சாந்தமூர்த்தி, லலிதாம்பிகை, அம்பிகைபாகன், பத்மாம்பிகை, நந்தினி, நந்ததாஸ், மற்றும் காலஞ்சென்றவர்களான,சோம்ஸ்காந்தராஜா, அருள்காந்தராஜா, நகுலதாஸ் ஆகியோரின் பாசமிகு இளைய ஐயா ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.