கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் செல்வராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் கொடுத்த கவிதை தொகுப்பே!
காலம் கிழித்த கொடுமை தவிப்பே!
எங்களை தவிக்க விட்டு நீர்
தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?
பெற்ற தாய் கலங்கி நிற்க
கண்ணின் மணி போன்ற
சகோதரி கரைந்து போக
உன் அன்பிற்கும் ஆசைக்கும் உரிய மனைவியையும்
உன் இரண்டு முத்துக்களைகளையும் தவிக்க விட்டு
எங்கு சென்றாயோ ?
அப்பாவின் முகம் காண பிள்ளைகள்
தவிக்கும் தவிப்பு உனக்கு தெரியவில்லையா
தினமும் உம்மையேத் தேடி அலைகின்றோம்
உம் சொந்தங்கள் அனைவரும் உம்மைத் தேட
நீ மாயமாக மறைந்ததென்ன?
ஆண்டுகள் ஐந்து சென்ற பின்பும் உம்
அன்பு முகம் எப்போதும் எம்மை விட்டு அகலாதே!
என்றும் உன் ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!