Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1946
இறப்பு 22 APR 2026
திரு தர்மலிங்கம் இராசரத்தினம்
வயது 79
திரு தர்மலிங்கம் இராசரத்தினம் 1946 - 2026 பலாலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஞானவைரவர் வீதி உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசரத்தினம் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(சோதிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலாண்டேஸ்வரி(உதவி அதிபர் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரி), அம்பிகாதேவி(லண்டன்), அருமைநாயகி(சமூர்த்தி உத்தியோகத்தர் அளவெட்டி வங்கி), சூரியகுமார்(ஜேர்மனி), இரஞ்சித்குமார்(லண்டன்), அனுசியா, தர்சினி (லண்டன்), தர்சனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குபேந்திரநாதன்(கனடா), செல்வச்சந்திரன்(லண்டன்), அற்புதநாதன்(Jaffna Electrical's manager), யசோதா(ஜேர்மனி), கஜேந்தினி(லண்டன்), சுதாகரன், நிமலன்(லண்டன்), சதீஸ்குமார்(PUBLIC HEALTH INSPECTOR MC/JAFFNA) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்லம்மா, சின்னையா(ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா(சுவிஸ்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, செல்வராணி, காலஞ்சென்ற பொன்னம்பலம், கலாதேவி, மோகனா(சுவிஸ்), லலிதாதேவி(ஜேர்மனி) ஆகியாரின் அன்பு மைத்துனரும்,

அஜின்(லண்டன்), அஜன்(லண்டன்), அபிஸ்(லண்டன்), தஷணிகா, அக்சயா(லண்டன்), ஆதீஸ்(ஜேர்மனி), அஸ்னா(லண்டன்), ஜெய்சன்(ஜேர்மனி), ஜெனிக்(ஜேர்மனி), அபிசாந், ருக்சனன், அபிரசாந், வைஸ்ணவி, அஸ்விகாந், கீர்த்தன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து அஞ்சலிக்காக அவரது பிறப்பிடமான பலாலியில் வைக்கப்பட்டு பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
இரஞ்சித்குமார் - மகன்
லலிதா - மகள்

Photos

Notices