உறவென்று அருகோடு நீ நின்ற போது
உணர்வோடு நான் கொண்ட வலிமை - என்
உருத்தென்று எனை என்றும் நீ சொன்ன போது - உன்
கருத்தோடு நான் கண்ட பாசம்
மறை நான்கும் காணாத நெறி
உந்தன் நேர்மை
மனம் என்றும் கரம் கூப்பி நிற்கும், உன்
மகிழ்வான மொழிகேட்க
இனி எங்கு செல்வேன்
உலகோடு - நீ
இன்று இல்லை.