
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குருசாமி அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், இருபாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருசாமி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை குருவம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
கோமதி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் இளைய சகோதரரும்,
இராசலிங்கம்(Monaco), கனகம்மா(இந்தியா), எஸ்தர்(கனடா), பரமேஸ்வரி(பிரித்தானியா), காசிலிங்கம்(பிரான்ஸ்), சந்திரலிங்கம்(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
தேயோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-10-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை White House, 180 Main Street, Jaffna எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our deepest sympathies. RIP.