திதி:27/07/2026
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெயக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
ஒரு வருடம் கடந்தாலும்,
உங்கள் அன்பு எங்கள் வாழ்வின்
ஒளியாகவும், உங்கள் நினைவு
எங்கள் இதயத்தின் துடிப்பாகவும்,
உங்கள் விசுவாசம் எங்கள் பாதையின்
வழிகாட்டியாகவும் இருக்கிறது.
“பூமியில் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்,
தெய்வ அருளின் நிழலில்
என்றும் அமைதியாக உறங்குகிறீர்கள்.”
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Mahintha anna, Jarvis anna, but to us, Jeya anna — you will be deeply missed. The entire Aspect Team sends our deepest condolences to you and your family. Your legacy will live forever.