யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சந்திரசேகரன் அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று 40 ஆண்டுகளாகியும்,
நம் சகோதரன், மாமா சந்திரன்,
புங்குடுதீவின் மண்ணில் பிறந்து,
அந்த மண்ணின் மக்களுக்கு ஒளிமயமாய் வாழ்ந்தாய்.
எங்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டும் சந்திரனாய்,
எப்போதும் சிரித்துக் கொண்டு இருந்தாய்
அன்பு பொழிந்த ஓர் அழகிய செல்வன்
புங்குடுதீவின் மக்கள் உறவுகளை தனது குடும்பமாகக் நேசித்தாய்
அழைப்பின்றி அனைவர்க்கும் உதவிய கைகள்,
நீயே எங்கள் சகோதரன், நண்பன், மகன்,
உன்னை அறிந்த ஒவ்வொருவருக்கும்
நீ ஒரு மறக்க முடியாத சகோதரன்
காலங்கள் கடந்தாலும் ஆண்டுகள்
சென்றாலும் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் சிவமாக என்றும் எங்களில் வாழ்கிறாய்
நீ மறைந்துவிட்டாலும், புங்குடுதீவின் மண்ணில்
உனது நினைவுகளும் அன்பும் எப்போதும் வாழ்கின்றன.
எங்கள் அனைவரினதும் இதயத்தில்
குடி கொண்டிருக்கும் எம் அன்புச் சகோதரன்
40 ஆண்டுகள் ஆகியும் எங்கள் எல்லோருடைய
இதயத்தை விட்டு அகலவில்லை.
நாம் இருக்கும் வரை உன் நினைவுகள்,
உனது செயல்கள், எல்லோரிடமும் அன்பும்,
பாசமும், புன்சிரிப்பும் கொண்ட எங்கள்
அன்புச் சகோதரன் நீ எங்கள் இதயங்களில்
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறாய்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆறாது உன் பிரிவு
உம்மைப்போல் சகோதரன் யாருக்கும் கிடைக்காதய்யா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...