9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு அச்சுகூட வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலெட்சுமி சூரியகுமார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம் எம்
இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஒரு நொடி
உறைய வைக்கும் அம்மா
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா-
அம்மா உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute