யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மகுணசிங்கம் சதானந்தலெட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மானியூர் மண்ணுதித்த மாசற்ற மாணிக்கமே
வேலணையூர் மண்புகுந்த விலையில்லா பொக்கிஷமே
அன்பினது அர்த்தமதாய் அவனிகண்ட அற்புதமே
இல்லத்தின் வெளிச்சமதாய் ஒளிர்ந்திருந்த குலவிளக்கே
உறவுகெல்லாம் ஊன்று கோலாய் உயிர் கொடுத்த உத்தமியே
அலறுகின்றோம் அனுதினமும் உனையேயெண்ணி உறவுகள் நாம்!
நீங்கள் விட்டுச்சென்ற உங்கள் நினைவுகள்
எங்களை விட்டு நீங்கா காலசுவடுகள் உங்கள்
உயிர் எங்களை விட்டுச் சென்றாலும் என்றும்
நீங்கள் எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்
என்ற எங்கள் நினைப்புடன் உங்கள் ஆத்மா
சாந்தி அடைய மானியூர் மருதடி விநாயகர்
பாதார விந்தங்களை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் நினைவுடன்
குடும்பத்தினர்