Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 18 OCT 1955
மறைவு 27 JAN 2026
திருமதி தர்மதேவி செல்வராசா
வயது 70
திருமதி தர்மதேவி செல்வராசா 1955 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மதேவி செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பத்துமாதம் மடிசுமந்து
 பக்குவமாய் பெற்றெடுத்து
 பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
 கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

 அன்புடனும் அளவற்ற பாசத்துடனு
ம் கண் இமைக்குள் வைத்து வாழ
வழிகாட்டிவிட்டு எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
 கஷ்டங்கள் பல வந்தாலும் கவசமாய்
எங்களைக் காத்தது உங்கள் பாசம் அம்மா......!!!...!!

 எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
 இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!
 அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
 உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியை 26-02-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகைத் தந்து கிரியைகளிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
சரஸ்வதி வித்தியாலத்திற்க்கு அருகாமை
மட்டுவில் தெற்க்கு,
சாவகச்சேரி 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 28 Jan, 2026