Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JAN 1945
இறப்பு 15 JAN 2020
அமரர் தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி
வயது 75
அமரர் தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி 1945 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கலாநிதி தணிகாசலம்பிள்ளை(ஓய்வுநிலை கல்வி அமைச்சின் முதுநிலை கல்வி ஆலோசகர், முன்னாள் மகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சுசிதரன்(புற்றுநோய் வைத்தியசாலை- தெல்லிப்பளை, தற்போது தேசிய வைத்தியசாலை- கொழும்பு), நந்தனன்(Chairman- Land maark Engineering Pvt Ltd), சுதந்தி(அவுஸ்திரேலியா), தர்சினி(ஆசிரியர்- கொழும்பு இந்துக்கல்லூரி), தணிகை பாலன்(Accountant- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. தில்லைநாதன், காலஞ்சென்றவர்களான சிவகுநாதன், சிவானந்தன் மற்றும் சண்முகநாதன்(முன்னாள் கிராம சேவகர் முரசுமோட்டை), காலஞ்சென்ற பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. துஷ்யந்தி(களுபோவில வைத்தியசாலை), சுகந்தினி(Engineer), நரேந்திரன்(Lead Estimator), ஜயந்திரன்(வெளிநாட்டு அலுவலகள் அமைச்சு), சௌமியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீராம், ரகுராம், சிவாணி, தணிந்தன், ஜயதரன், சேதுசன், காணுஜன், பிரணிதன், நிகாஷன், தணிசா, தனிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் ந.ப 12:30 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை Lotus Hall இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்