
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் தங்கமுத்து அவர்கள் 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது,
ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்.
நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
(1 கொரிந்தியர் 15:51-52)
அன்னார், காலஞ்சென்ற ராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயந்தி, ஜெயகாந்தன்(பிரான்ஸ்), ஜெயாநிதி, ஜெயசுகி(சுவிஸ்), ஜெயந்தினி(ஜெர்மனி), ஜெயவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தம்பிராசா, சின்னத்துரை, வள்ளியம்மை, பூலோகம், கமலேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, நாகராசா, மணிவண்ணன், சதாநந்தன், சுவிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரண்யா, அனோஜா, தனோஜன், அசோக், வினோத், திசோக், கிசோக், நிருஷா, ஜெயஜோகிந், ஜெசிந்தா, மயூரி, மைதிலி, மதுசன், கிரிஜன், அக்சயன், அனுஜன், ஜாசியா, ஜோய்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஜஸ்கா, அனுக்ஷன், அக்சயா, அஸ்வின், அஞ்சலி, அர்ஜீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் சாவகச்சேரி சங்கத்தானையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-01-2019 வியாழக்கிழமை அன்று சாவகச்சேரி கைதடி நுணாவில் எக்காளதொனி பூரண சுவிஷேச சபை, சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்