யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rinkerode ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தணிகாசலம் சோமாஸ்கந்தராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும் எங்களால்
ஆறமுடியவில்லை உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து நேசமாய்
எமை வளர்த்து துணிவுடனே
நாம் வாழ வழியதனைக் காட்டி
எமைவிட்டு சென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே
உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு..!
உங்களை எம் வாழ்நாள் உள்ளவரை
எம் இதயத்தில் வைத்து வாழ்வோம்!
காற்றிலே கலந்து ஆண்டுகள் பத்து ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எம் மனத்திரையினுள்ளே முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசி
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் விழிகளின் ஓரம்
கண்ணீர்த்துளிகளாய்
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவது போல
நாங்கள் உமைப்பிரிந்ததால் மனம்
தத்தளித்து ஆடுகின்றதே..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!