

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு சிவஞானசுந்தரம்(ஒய்வுபெற்ற உப தபாலதிபர், ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய அறங்காவலர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் ஆத்ம் சாந்திக்கிரியைகள் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் குடும்ப சமேதராய் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் நேரிலும், தொலைபேசி மூலமும், அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.