யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரன் கண்ணதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
புங்கைநகர் பூமித்தாயின் ஊரதீவு மடிதனிலே
தங்கஈஸ்வரனுக்கும் அம்பிகை குணத்தாய்க்கும்
தலைமகனாய் வந்துதித்தாய்
தரணியிலே உன் பிறப்பால் என்ணிலடங்கா
உவகையுற்றாள் அன்னையவள்
கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணா
என பெயர் வைத்தாள்
அருள் மகளின் தம்பியாய் அவள் முன்னே நீ தவள்ந்தாய்
பள்ளியிலே படிக்கவிட படிப்பு எனக்கு வேண்டாம் என்று
பாலகர் நம் பசி தீர்க்க பட்டணம் சென்றாயே
குலதெய்வம் கோவிலிலே தீ மிதித்த பாதங்கள்
சூடாறும் முன்னமே தூரதேசம் போனாயே
குணமக்கா பிள்ளை இது குணமான பிள்ளை என்று
பார் போற்ற வாழ்ந்தாயே பலர் நெஞ்சில் உள்ளாயே
உன்னவளின் பிரிவின் பின்னே உனை எண்ண மறந்ததேனோ
அம்மணியே உன்னருகில் ஆசையுடன் எனையழைப்பாய்
என அனுதினமும் கூறி நின்றாய்
அண்ணியும் உன் குரல் கேட்டு அவசரமாய் அழைத்தாவோ
திராத நோய் வந்து தினம் உனை வாட்டியதோ
அனாதையாய் மடியேன் அம்மா என்று
ஆசை வரம் கேட்டாயே
சகோதரர்கள் பரிதவிக்க பரிஸ் முழுவதும் கலங்கி நிற்க
பாணாவிடையான் பாதம் பற்ற பறந்தோடி சென்றதேனோ
கதறி அழைக்கின்றோம் அண்ணா எங்கள் குலவாரிசாய்
மீண்டும் எங்களிடம் வருவாயோ
உனது ஆத்மா சாந்தியடைய
பாணாவிடையானை பிரார்த்தித்து
நிற்கின்றேம்
கண்ணா
எங்கள் அண்ணா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.