
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி வல்லை வீதி, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் வேலாயுதம் அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம்(வெக்டர்- கணித ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலேந்திரா(பிரித்தானியா), காலஞ்சென்ற குகேந்திரா, கணேந்திரா(பிரித்தானியா), இரத்தினவேல்(ரத்தி- Director, Rock Engineering Pvt Ltd) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி(Accountant- ACMA, பிரித்தானியா), காலஞ்சென்ற நாகரத்தினம், சொர்ணரத்தினம்(Retired Nursing Officer), புஸ்பரத்தினம், ஆறுமுகசுவாமி(Engineer) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லாவண்யா(பிரித்தானியா), கீத்மாலா, மேகலா(பிரித்தானியா), இராஜினி(ஆசிரியை, நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிஸ்வேல், சுருதி, ஸ்கந்தவேல், ஸ்சாமினி, டிசாயினி, மித்திரவேல், சஞ்ஜித்வேல், சஞ்ஜெய்வேல், சந்தியா, சஜித்வேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-11-2018 சனிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 08:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் யாழ். உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் உடுப்பிட்டி இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Our deepest sympathies and heartfelt condolences to you all.