
உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் நல்லையா அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், ஜெயக்குமார் மற்றும் பவளம், சந்திராதேவி, விமலாதேவி, கமலாதேவி, மாலினிதேவி, ஜெயச்சந்திரகுமார், மாலதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரஞ்சினி(இந்தியா), சிவகுமாரன், பிரபாகரன்(லண்டன்), றோசினி(நெதர்லாந்து), பஞ்சதேவி(ஜேர்மனி), சிவபாலன், கருணாகரன்(வடபிராந்திய போக்குவரத்துச் சபை), ஞானரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயதெய்வேந்திரன்(இந்தியா), சத்தியதேவி(ஆசிரியர்- வயாவிளான் சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயம்), ஜெயக்குமாரி(லண்டன்), செல்வச்சந்திரன்(நெதர்லாந்து), குகனேஸ்வரன்(ஜேர்மனி), சாந்தரூபி, கெளரி(முன்பள்ளி ஆசிரியை- ஏழாலை), நந்தினி(ஆசிரியை- மானிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன்(லண்டன்), வேணுஜா(கொமர்ஷல் வங்கி- நெல்லியடி), பிந்துஜா(விவசாயத் திணைக்களம்- முல்லைத்தீவு), விபிஷணன்(Wintech Builders), பிரபானுஜா, மாதுரி, டர்சிகா, சுவேதிகா, டீவிகா, துவானுஜா, அபிசாலினி, டிசாலினி, சரண்யா, அகர்ஷனன் ஆகியோரின் அருமை பேத்தியும்,
அகரவன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் உடுவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.