யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சென்னை போரூரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள்
எங்களால் நம்ப முடியவில்லையே
நீங்கள் இல்லையென்று
முப்பது நாள் கடந்தும் அம்மா
முழுமனதாய் ஏற்கமுடியவில்லை
ஏக்கத்துடன் எம்மைத் தவிக்கவிட்டு
ஏன் அம்மா சென்றீர்கள்
எவ்வளவு கஸ்ரப்பட்டு எங்களை
நீங்கள் வளர்த்தீர்கள்
சின்ன வயதில் அப்பாவை இழந்த எங்களை
கஸ்ரம் தெரியாமல் இருக்க
பார்த்து பார்த்து வளர்த்தீர்களே
இதுவரை காலமும் அப்பா இல்லையென்ற
கவலை தெரியவில்லை
ஆனால் இப்போது வலிக்குதம்மா எங்களுக்கு
அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை
என்று நினைக்கையிலே
துக்கம் நெஞ்சை அடைக்குதம்மா
இப்படி எங்களை அனாதைகள்
ஆக்கி விட்டு சென்றீர்களே
நீங்கள் இல்லாத உலகத்தில்
வாழ்வதை நினைக்கும் போது
இதயம் வலிக்குதம்மா
மீண்டு ஓடோடி வந்திடுங்கள்
எங்களுடன் வாழ்ந்த காலம் போதும்
என்றா சென்றுவிட்டீர்கள் ஆனால்
எங்களால் தாங்க முடியவில்லையே
ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
பாசமாய் வளர்த்த பிள்ளைகளை
பாதியிலே தவிக்கவிட்டு
எங்கு நீங்கள் சென்றீர்கள்
எங்களுடன் வாழ்ந்த காலங்கள் எல்லாம்
கண்முன்னே வந்து போகுதம்மா
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
விண்ணிலே தெய்வமாய் நின்று
எம்மை வழி நடத்துங்கள் அம்மா
உங்கள் அன்பு முகத்தை முன்நிறுத்தி
ஆண்டாண்டு காலம் வாழ்ந்திடுவோம்
நினைவில் எம்முடனனும் நிஜத்தில் இறைவனுடனம்
கலந்திட என்னென்றும் பிராத்தனை செய்திடுவோம் அம்மா
அம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest in peace