

யாழ். ஊரிக்காடு நாவலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை விகாரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கராசா அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பவளசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியபாமா, பிரபாகரன், சசிகரன், சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரன், ரூபராணி, சுமதி, வரதநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌதாரன், கௌசியா, கௌசிகன், அபிராமி, லக்சனா, றகனியன், கரிஸ், கிரித்திகா, கிசோர், கிதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் முழங்காவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.