யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜா இராசையா அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வர்ணமலர், திருமலர்(ராணி), சிவராஜா(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியசீலன், சுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, சச்சிதானந்தம், சுந்தரலிங்கம் , கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக மிகக் குறைந்த குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெற உள்ளது. இதனால், அன்னாரின் பூதவுடலைப் பார்வையிட மற்றும் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள விரும்பும் குடும்ப உறவினர்கள் முன்பதிவு செய்வதற்கு சிவா (சகோதரர்) அல்லது மதி(மனைவி) அவர்களின் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with your family at this moment. Amen! THambiah Sellapackiam family.