20ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தங்கராசா தங்கரெத்தினம்
1934 -
2004
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா தங்கரெத்தினம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-07-2024
ஆண்டுகள் இருபது அகன்றோடி
விட்டாலும் அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க
கற்றுக் கொடுத்தாய்!
இரவெல்லாம் விளக்காக
விழித்திருந்து எமக்காய்
உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் நினைவுகளுடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
விஜேயசேகரம்(மருமகன்- கனடா)
I love you so much my mom. I am always blessing for you