யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா சாந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆருயிரே... சகோதரனே...
அண்ணா... அண்ணா... நீ எங்கே...
கண்கள் பெருக, உள்ளம் உருக
கடந்து போகுது உங்கள் முகம்
கிடந்து தவிக்குது எங்கள் அகம்
கவலை மாறாத ஈர யுகம்
அல்லும் பகலும் பிரிவின் தாகம்
சொல்லும் செயலும் ஓய்ந்த தேகம்
சோகம் சூழும் முகாரி ராகம்
யாகம் மூழும் விழிகளின் ஓரம்
ஒரு தாய் வயிற்றில்
ஒன்றாய் பிறந்தோம் - இன்று
வாய் விட்டு அழுதோம் நயநீரோடு
வாய் விட்டு அழைத்தோம் நதிநீரோடு
கல்லறை முன்னே - உன் தரிசனம் காண
காலம் முழுதும் உன்னை மறவோம்
ஞாலம் புலரும் போதும் மறையோம்
ஞாபகங்கள் கொஞ்சம் போதும்
பூவனமாய் எங்கள் நெஞ்சம் மாறும்
சிரித்த முகமும் அறநெறி நெஞ்சும்
சகோதர பாசத்தின் அரிய சொந்தம்
உயிருள்ள வரையும் வாழும் பந்தம்
அண்ணா நீயே பேரானந்தம்
ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ
வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே
எமை பாரோடு தவிக்க விட்டு போனதேனோ
வானத்து நிலவாய் வலம் வந்து
அரும்பணியாற்றிய அற்புதமே
இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும்
யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை
மீளாத்துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே?
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் பாசமிகு
சகோதர சகோதரிகள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள்
அமரர் தங்கராஜா சாந்தகுமார் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்வுக்காகவும், பணிகளுக்காகவும் நினைவு கூறும் நினைவு அஞ்சலி எதிர்வரும் 02-04-2025 புதன்கிழமை மு.ப 11.30 மணியளவில் இல.199. கொழும்புத்துறை வீதி, பண்டியந்தாழ்வில் உள்ள விஜய் பலஸ் மண்டபத்தில் நடைபெற இருப்பதனால் இந் நினைவு அஞ்சலியினை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.