1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 03 JUL 1948
உதிர்வு 01 DEC 2020
அமரர் தனலட்சுமி பாலசுப்ரமணியம் (கிளி)
வயது 72
அமரர் தனலட்சுமி பாலசுப்ரமணியம் 1948 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி பாலசுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று

கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று

பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து வழி
நடத்துங்கள் அம்மா!

வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
அம்மா உன் நினைவோடே...!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 30 Dec, 2020