

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை காத்தார் சின்னக்குள வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பராசக்தி அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நகுலகீதா, கலா(வவுனியா), தயாபரன்(கனடா), தயாநிதி(கனகராயன்குளம்), தயானி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீதரன்(கிளிநொச்சி), சுரேஸ்வரன்(பிரான்ஸ்), அருளரசி(கனடா), விஜயகுமார்(பிரான்ஸ்), லகுலேசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, பார்வதி, யோகராசா, தையல்நாயகி, குணரத்தினம் மற்றும் நல்லம்மா, பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரினோஜா, தினேஸ், சரணிகா, தமிழினி, விஜந்தன், ஷர்மிதா, அனுஜா, திவானிகா, திவிசன், ரேனுஜன், கதீஷன், டவீசன், சபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வவுனியா காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details