Clicky

அன்னை மடியில் 31 OCT 1937
ஆண்டவன் அடியில் 15 SEP 2024
அமரர் தம்பு பாலேந்திரா 1937 - 2024 Balangoda, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampoe Balendra
1937 - 2024

அன்பு அஞ்சு & மாறன்! எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சித்தாவின் மறைவு உங்களை எப்படிக் கலங்கிட வைத்திருக்கும் எனபதை நாம் நன்கறிவோம். அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சித்தா எங்களுடன் எப்போம் ஒரு நல்ல நண்பனைப் போல் பழகுவார். அந்த நேசத்திற்குரிய நினைவுகளையும், சித்தா எங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியான தருணங்களையும் நாம் பொக்கிஷமாக வைத்திருப்போம். அன்பிற்குரிய சித்தியும் சித்தாவும் என்றைக்கும் எப்போதும் எமது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் அழகிய ஆன்மாக்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் வாழும். இந்தக் கடினமான, சோதனையான, வேதனையான, மிகவும் துயரமான தருணத்தில் எங்கள் ஆழ்ந்த இதய பூர்வமான அனுதாபங்களையும் இரங்கல்களையும் சமர்ப்பிக்கிறோம். இந்த துயரமான சந்தர்ப்பத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக அன்பும் ஆற்றலும் உங்களை சூழ்ந்து கொள்ளட்டும். ஹரே கிருஷ்ணா ?? பிரார்த்தனைகளுடன் சுதா அக்கா, குழந்தைகள் மற்றும் ரங்கன் அண்ணா, சென்னை, இந்தியா.

Write Tribute