Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 DEC 1950
இறப்பு 03 JAN 2013
அமரர் தம்பிராசா தேவராசா
வயது 62
அமரர் தம்பிராசா தேவராசா 1950 - 2013 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் உரும்பிராய் மேற்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா தேவராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:13/01/2023.

ஆண்டுகள் பத்து உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
 பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
 காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
 இப்போது நாம் வாழும் வாழ்வின் பெருமைகளுள்
 உங்கள் வியர்வைத் துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
 இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில் இப்போதும்
கணீரென்று கேட்குதப்பா! ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் புன்முறுவல் பூப்பூத்தவதனமாய்
 இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute