

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு கலட்டி வீதியை வசிப்பிடமாகவும், புத்தளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை துரையப்பா அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தமோதரம்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுதேவன், சுதர்சன், சுமதி, வாசீகன், அருள்மதி, மதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-07-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. We hope your pleasant memories of him will help overcome the grief and celebrate his life. May his sole rest in peace.