
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாகநாதன் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான நிசாந்தன், கௌசல்யா, மற்றும் பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருபேத்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
முருகேசம்பிள்ளை, சற்குணநாதன், ஜெகநாதன், லோகநாதன், கமலநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சத்தியதேவி(கொலண்ட்), கமலாதேவி(பிரான்ஸ்), கருணாதேவி(மல்லாவி), ஸ்ரீ கிருஸ்ணமேனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கன்சிகன்(லண்டன்), இனோச்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.