அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து உடனடியாக நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து இறுதி நிகழ்வுகளில் பங்கு கொண்ட நல்லுள்ளங்களுக்கும், பல்வேறு தேசங்களிலிருந்தும் தொலைபேசி முகப்புத்தகம் ஈ.மெயில் போன்றவற்றினூடாகவும் அனுதாபத்தினை தெரிவித்த பாசமிகு உறவுகளுக்கும், பத்திரிகைகளில் கண்ணீர் அஞ்சலி தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டோர்க்கும், மலர் வளையங்கள் மாலைகளினூடாக அஞ்சலி செலுத்திய உறவுகளுக்கும், மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி புரிந்த அன்பான உறவுகள் யாவருக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
மாமாவின் துயர் கேட்டு அவரின் இழப்பால் துயருறும் மாமி ,மைத்துனர்,அவர்களின் குடும்பத்தினருக்கும் ,உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.அத்துடன் மாமாவின் ஆத்மா சாத்தி அடைய பிராத்திக்கின்றோம்....