யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், காலஞ்சென்ற பிரேமச்சந்திரன், சரச்சந்திரன், ஜெயச்சந்திரன், மோகனச்சந்திரன், காலஞ்சென்ற பிரேமலதா, புஷ்பலதா, விஜியலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சங்கீத பூசணம் இராசலிங்கம், சற்குணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுசீலா, சுகிர்தமலர், யோகராணி, ராஜேந்தி, கௌரிகீதா, முரளிதரன், ஜீவானந்தன், வள்ளிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
இலட்சுமி, ஆனந்தசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், காலஞ்சென்ற நித்தியானந்த சிவம், சண்முகசிவம் ஆகியோரின் மைத்துனரும்,
கௌரிபாலன், சிந்துஜா, உமைபாலன், மதுரன், சரண்யா, சரசாங்கி, சாயினி, நர்மதா, மீனாட்சி, பூஜா, சினேகா, சகானா, தேனுகா, கவிபாலன்,சூர்யா, கிரண், காலஞ்சென்ற பாரதி , தாரணி, ஜனனி, வாகினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கதிரவன், எய்வா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.