யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா திருநாவுக்கரசு அவர்கள் 19-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன் அவர்களின் பாசமுள்ள பெரிய தந்தையும்,
சந்தானலக்ஷ்மி, காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜகுலசேகரம், தனலட்சுமி, புஷ்பராணி, காலஞ்சென்றவர்களான இராசதுரை, மயில்வாகனம், இராசரத்தினம், இராஜசேகரம், இராஜநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தினி, இந்திராணி, சண்முகராஜா, கிருபராஜா, சிவராஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,
தவலிங்கம், ரவிராஜ், அஞ்சலா, சாந்தி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
ஜனனி, ஸ்ரீபிரசன், ஸ்ரீஷைய்லன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.