

யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, சொய்சாபுர மொறட்டுவ, கனடா Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா ரூபன் இன்பராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் இத்துயர் சுமந்து ஓராண்டு
ஆனாலும் நித்தம் உங்களை
நினைத்தே நிம்மதி இழக்கின்றோம்
ஓராண்டு என்ன நூறாண்டே ஆனாலும்
கண்விட்டு அகலுமோ உங்களின் விம்பம்!
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே
எங்களை தவிக்க விட்டு
தூரமாய் சென்றதேனோ
எங்கள் முகம் காண
வருவீரோ ஓர் கணமே?
உங்களின் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஆனைக்கோட்டை அடைக்கல நாயகி ஆலயத்தில் 09-01-2022 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணிக்கும், கனடா எற்மண்டன் புனித திரேசா ஆலயத்தில் 09-01-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
Our deepest sympathies Ippa. RIP. The good memories and helps that you did to me to bring me now are great. You are in our hearts and prayers and we will meet in paradise again. Love you so much...