யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதி, கூமாங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தர்மகுணசிங்கம் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதானந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புஸ்பராணி, திலகவதி, யோகராணி, காலஞ்சென்ற ஜெயராணி, உதயராணி, நித்திய கல்யாணி, நவசோதி ஆகயோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசநாயகம், இராமச்சந்திரன், வீரசிங்கம், செல்வராசா மற்றும் செல்வநாயகம், சொக்கலிங்கம், செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காயத்திரி(கனடா), இராகவேந்தன், கார்த்திகா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வக்குமரன்(கனடா), ஸ்ரீ விஜயகாந்தன்(பொது முகாமையாளர், ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷனா, அக்ஷரா, ஆரூசன், அனிக்கா, ஆதேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நெழுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details