யாழ். அரியாலை கதிரவேலு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு சுகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தையர் ஆண்ட மண்ணிலே எம்
தந்தையை இழந்து ஆண்டுகள் இரண்டாகின்றன!
முந்தையர் எமையாண்ட மண்ணிலே
எந்திரமாய் வாழும் நாம்,
உங்களை நினைத்து அழுகிறோம்!
தினமும் தொழுகிறோம்!
சிந்தை கலங்கி எங்கள் எண்ணங்கள்
சிதறிய போது- ஒரு நல்ல
தந்தையாய் ஆறுதல் கூறி,
அன்பைப் பொழிந்து,
அரவணைத்து எம்மை
வழி நடத்தினீர்கள்!- உங்கள்
சுந்தரவதனம் எம்மனத்திரையில் என்றும்
படமாய் ஓடும் அப்பா- உங்கள்
காந்தக்குரல் எம் காதுகளிலென்றும்
கணீரென்று ஒலிக்கும் ஐயா!
மந்திரம் செய்து காலன் உங்களைத்
தந்திரமாய்ப் பிரித்து விட்டானையா!
விந்தையாய் இருக்கிறது இன்னும்
விடை காண முடியவில்லை!
விழிநீர் சொரிந்து நிற்கின்றோம்!
அந்தி சாய்ந்து விட்டால்
முந்தி அப்பா இருக்கிறார் என்ற ஆறுதல்!
இப்போது
யாரும் இல்லையே அப்பா
எமக்கு ஆறுதல் கூற
கூவிடும் எங்கள் குரல் கேட்டு
ஓடி வாருங்கள் அப்பா
தேடி எத்தனை செல்வங்கள் இருந்தும்
தெய்வம் நீங்களில்லாது என்ன பயன்?
தேயாத உங்கள் நினைவுகளோடு பயணிக்கிறோம்...
அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும்