
மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நுணாவில் மத்தி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சோமசுந்தரம் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுந்தரேஸ்வரன்(ஈசன்), குமரேசன்(குமார்), சுந்தரரஜனி(கனடா), சுபாசினி(லண்டன்), காலஞ்சென்ற ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமாரி, சாந்தி, மோகனராஜன்(கனடா), சதீசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமேஸ்வரி, கணேசன்(லண்டன்), சிவலிங்கம்(கனடா), இராமநாதன்(ஜேர்மனி), ஜெகநாதன், இராஜேஸ்வரி(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் பிரதேச செயலகம் மன்னார்), கௌரீஸ்வரி(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகஸ்தர் சாவகச்சேரி நகரசபை), கேதீஸ்வரநாதன்(ஜேர்மனி), ஈஸ்வரி(சுவிஸ்), கேதீஸ்வரி(கனடா) ஆகியோரின அன்புச் சகோதரரும்,
செல்வராசா, வசந்தராணி, செல்வகுமாரி, குகநாயகி இராஜேஸ்வரி, இராசரெத்தினம், காலஞ்சென்ற விக்னகுமார், சுதர்சனா, சுகுணேந்திரன், விவேகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுலன், கோபிசன், வினுஜன், றேஸ்மி, திவ்வியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கன்னாப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சோமுமாமாவின் இழப்பினால் துயரடையும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மாமாவின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்.