Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 APR 1932
இறப்பு 10 JUN 2026
திரு தம்பு புண்ணியமூர்த்தி
ஆசிரியர்
வயது 94
திரு தம்பு புண்ணியமூர்த்தி 1932 - 2026 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு புண்ணியமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆலமரம் சரிந்ததே நாட்கள் முப்பதொன்று
ஆனதே வேர் இல்லா விழுதுகள்
நாம் தினம் வாடித் தவிக்கின்றோம்

வேண்டிடும் பொழுதெல்லாம்
உதவிகள் புரிந்தே விரும்பிய
யாவும் சேர்த்து வைத்தீர்களே!

பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே

மறைந்துவிட்ட உங்கள் உருவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
இதயம் துடிக்கும் வரை
மாறாத நினைவு

ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!

அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.