யாழ். ஏழாலை களபாவோடையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சிவலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே…
நினைவின் நிழலில் நீங்கள் என்றும் நிழலாய்...
அப்பாவே…
பத்து ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் குரல், உங்கள் சிரிப்பு,
எங்கள் உள்ளத்தில் இன்னும் ஒலிக்குது…
எங்களை காத்த பெரிய நிழல் நீங்கள்,
இன்னும் நினைவாக நின்று
எங்களை தாங்கி நிற்கிறீர்கள்…
உங்கள் ஆசீர்வாதமே இன்று எங்கள் சக்தி.
உங்கள் கைபிடித்த பாதையில்தான்
இன்னும் எங்கள் நடை தொடர்கிறது…
உங்கள் சொற்கள் எங்கள் மனசுக்கு
ஒளிச்சுடராக மாறிகிடக்கின்றன.
நீங்கள் இல்லை…
ஆனால் நீங்கள் கொடுத்த
நினைவுகள்
என்றும் அழியாது…
ஒவ்வொரு மூச்சிலும்
உங்கள்
மாசற்ற அன்பு நிறைந்துள்ளது…
பத்தாண்டுகள் ஆனாலும்
‘அப்பாவே…’ என்ற
சொல்லில்
இன்னும் அந்தத் துடிப்பு,
அந்தப் பாசம், அந்த நம்பிக்கை
அப்படியே உயிரோடு இருக்குது.
எங்களை வழி நடத்து அப்பாவே… உங்கள்
ஆசி எங்களுக்கு கவசமாகி காக்கவேண்டுகிறோம்.