யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா பொன்னம்மா அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலைப் புனித தீர்த்தக்கரையிலும் 17-04-2023 திங்கட்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை அவரது இல்லத்திலும் இடம்பெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி: 7ம் கட்டை, கே.கே.எஸ் வீதி, மல்லாகம்.