யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா ஸ்ரீ செல்வம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் வெள்ளவத்தை கடற்கரையிலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனை 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 59, போதிருக்கிராம வீதி,
கொழும்பு 06.